Login Form
Invite Friends
| மூன்று அதிசயப் பொருட்கள் (11) |
|
|
|
| Written by kalvithulir |
| Thursday, 09 February 2012 23:06 |
|
எங்கும் இன்ப வெள்ளம்
பணிப்பெண்கள் இளவரசி நகாரை அழைத்து செல்வதைப் பார்த்தான் இளவரசன். ''மருத்துவரே! இத்தனை இளம் வயதில் உங்களுக்கு இவ்வளவு ஆற்றலா? என் வாழ்நாளிலேயே உங்களைப் போன்ற திறமையான ஒருவரைப் பார்த்தது இல்லை. உங்களால் என் ஆசை நிறைவேறப் போகிறது'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் அரசன்.
''அரசே! அந்த அழகி தற்காலிகமாகத்தான் குணமாகி உள்ளான். முழுமையாக குணமாக வேண்டுமானால் மந்திர பூசைகள் செய்ய வேண்டும்".
என்ன மந்திர பூசைகள் செய்ய வேண்டுமோ உடனே செய்து முடியுங்கள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறேன். அவள் எப்பொழுதும் இப்படியே இருக்க வேண்டும்'' என்றான் அரசன்.
''அரசே! பிசாசு ஒன்றுதான் அந்தக் குதிரையாக உள்ளது. அதை விரட்ட வேண்டும். நீங்கள் அந்தக் குதிரையையும் அழகியையும் எங்கே பார்த்தீர்கள்? அந்த இடத்தில் அவளையும் குதிரையையும் வைத்து மந்திர பூசை செய்ய வேண்டும்.
பூசை முடிந்தவுடன் அந்தப் பிசாசு பறந்து செல்வதைப் பார்க்கலாம். அதன்பிறகு அது மீண்டும் இங்கே வரவே வராது'' என்றான்.
முழுமையாக நம்பிக்கை வைத்திருந்த அரசன்,
''மருத்துவரே! பூசைக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன். எப்படியாவது அந்தப் பிசாசை விரட்டுங்கள்'' என்றான்.
படை வீரர்கள் சூழ அந்தப் புல்வெளிக்கு வந்தான். இளவரசி நகாரும் அணிகலன்கள் அணிந்து அங்கு வந்தாள். குதிரையும் அங்கே கொண்டு வரப்பட்டது. எந்த தவறும் நிகழக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான் இளவரசர் கமர்.
''அரசே! இன்றுடன் அந்தப் பிசாசு ஓடப் போகிறது. அது ஓடுவதை நீங்கள் எல்லோரும் பார்க்கப் போகிறீர்கள். அதற்காக சில சடங்குகள் செய்ய வேண்டும்'' என்றான்.
''உங்கள் விருப்பம் போலச் செய்யுங்கள்'' என்றான் அரசன்.
ஏதேதோ மந்திரங்களை உரத்த குரலில் சொன்னான் அவன்.
''இந்த அழகியைத் தூக்கிக் குதிரையில் அமர வையுங்கள்'' என்றான்.
அவளே குதிரையில் ஏறி அமர்ந்தாள். நானும் குதிரையில் அமர்ந்தால்தான் அந்தப் பிசாசை விரட்ட முடியும் என்ற அவன் குதிரையில் ஏறி அமர்ந்தான். குதிரையைப் பறக்க வைக்கும் திருகைத் திருகினான். குதிரை முன்னும் பின்னுமாக ஆடியது. குலுங்கியது. இடம் வலமாகத் திரும்பியது. அங்கிருந்த எல்லோரும் அவன் பிசாசை அடக்க முயற்சி செய்கிறான். அது அடங்காமல் முரண்டு பிடிக்கிறது என்று நினைத்தார்கள். அந்தக் குதிரை மேலே எழும்பி வானத்தில் பறக்க ஆரம்பித்தது.
மேலே மேலே வானத்தில் பறந்த அது அவர்கள் கண்களுக்கு மறைந்தது.
அழகியுடன் குதிரையில் அவன் திரும்புவான் என்று எல்லோரும் நீண்ட நேரம் காத்திருந்தார்கள். ஒருநாள் முழுமையாகக் கழிந்தது. அவர்கள் இருவரும் திரும்பாததால் அரசன் கோபம் கொண்டான். சிறையில் இருந்த காபூல் கிழவனை இழுத்து வரச் செய்தான்.
''அவலட்சணமானவனே! பிசாசுதான் குதிரையாக உள்ளது என்பதை ஏன் எங்களிடம் மறைத்தாய். அழகியுடன் அந்தப் பிசாசு பறந்து சென்று விட்டதே. விலை உயர்ந்த நகைகளை எல்லாம் அணிவித்து இருந்தேனே. இதற்கு உன் சாவுதான் தண்டணை'' என்று கத்தினான் அவன்.
கிழவன் சொன்ன எந்த விளக்கத்தையும் கேட்க அவன் தயாராக இல்லை. அவன் சைகை காட்ட வீரர்கள் அந்தக் கிழவனின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள்.
வஞ்சகனுக்குக் கொடிய தண்டனை கிடைத்தது. இளவரசன் கமரும் இளவரசி நகாரும் பாதுகாப்பாகப் பாரசீகநாட்டை அடைந்தனர். இளவரசர் வந்து விட்டார் என்ற மகிழ்ச்சியான செய்தி அரண்மனை எங்கும் வேகமாகப் பரவியது. தன் மகனுடன் பேரழகியான இளவரசியைக் கண்ட அரசன் காபூர் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டான்.
இனி அவன் தன்னைப் பிரியக்கூடாது என்று நினைத்தான். பறக்கும் குதிரையைத் துண்டு துண்டாக வெட்டி வீழ்த்தினான். இளவரசன் கமருக்கும் இளவரசி நகாருக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்த தொடங்கினார்கள்.
தூதன் ஒருவனை அழைத்த இளவரசன், ''நீ சானாநாட்டு அரசரிடம் செல். இங்கே நிகழ்ந்ததை எல்லாம் விளக்கமாக சொல். உங்கள் மகள் இளவரசி நகார் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். முதியவரான அவர் உள்ளம் வருந்தும்படி நான் நடந்து கொண்டேன். அதற்காக மன்னிப்பு வேண்டியதாக சொல். இந்தப் பரிசுப் பொருளை என் அன்பளிப்பாக அவரிடம் தந்துவிடு'' என்றான்.
தூதனும் அப்படியே செய்தான். தன் மகள் பொருத்தமானவனை மணந்து மகிழ்ச்சியாக வாழ்கிறாள் என்பதை அறிந்தார் அரசர். மகளைப் பிரிந்த துயரம் அவரை விட்டு நீங்கியது. இளவரசன் கமர் தன் தங்கைகள் மூவருக்கும் ஏற்ற அரசர்களைத் தேர்ந்து எடுத்து, திருமணம் செய்து வைத்தான். தந்தை இறந்த பிறகு கமர் பாரசீக நாட்டு அரசன் ஆனான். அவனுடைய நல்லாட்சியில் மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
(முற்றும்)
|
| Last Updated on Tuesday, 21 February 2012 21:48 |



