Login Form
Invite Friends
| மூன்று அதிசயப் பொருட்கள் (10) |
|
|
|
| Written by kalvithulir |
| Thursday, 09 February 2012 23:05 |
|
பைத்தியம் தெளிய வழி
தனக்குத் தேவையான செய்தி அனைத்தும் கிடைத்துவிட்டது. இளவரசி பைத்தியம் போல நடித்து திருமணத்தை தாமதப்படுத்துகிறாள். அவளுடனும் குதிரையுடனும் நான் எப்படியாவது இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும்.
அதற்கு என்ன செய்வது என்று சிந்தித்தபடி இருந்தான் அவன். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. மறுநாள் அவனை அரசவைக்கு அழைத்து சென்றார்கள். அவனைப் பார்த்த அரசன்,
''நீ யார்?'' என்ன தொழில் செய்கிறாய்? எதற்காக இங்கு வந்தாய்?'' என்று கேட்டான்.
''அரசர் பெருமானே! என் பெயர் காஜா. பாரசீக நாட்டைச் சேர்ந்தவன். மருத்துவத்திலும் மந்திர தந்திரங்களிலும் தேர்ச்சி பெற்று உள்ளேன்.
எப்படிப்பட்ட பைத்தியமாக இருந்தாலும் நான் குணப்படுத்திவிடுவேன். மற்ற மருத்துவர்களைப் போல நான் பைத்தியங்களை அடித்து துன்புறுத்த மாட்டேன். புகையின் முன் அமர வைத்து மந்திரங்கள் சொல்ல மாட்டேன். பல நாட்கள் எடுத்து கொள்ள மாட்டேன். அவர்களிடம் அன்பாக நடந்து கொள்வேன் இனிமையாகவே பேசுவேன். பல நாடுகளை சுற்றிவிட்டு இங்கு வந்தேன்'' என்றான்.
உங்கள் மருத்துவ முறை அருமையாக உள்ளது. நல்ல நேரத்தில் தான் இங்கு வந்தீர்கள். பேரழகி ஒருத்தியைக் கொடிய பேய் பிடித்து ஆட்டுகிறது. இங்குள்ள யாராலும் அந்தப் பேயை விரட்ட முடியவில்லை. நீங்கள் மட்டும் அதை விரட்டுங்கள்.
கனவிலும் எதிர்பாராத விலை உயர்ந்த பரிசுகளை உங்களுக்குத் தருகிறேன் என்றான் அரசன். எண்ணப்படி எல்லாம் நடக்கிறது என்று உள்ளுக்குள் மகிழ்ந்தான் அவன்.
''அரசே! பைத்தியம் எதனால் எப்படி ஏற்பட்டது என்பதை மருத்துவர் அறிய வேண்டும். எதையும் மருத்துவரிடம் மறைக்கக் கூடாது. அப்பொழுதுதான் அவரால் நோயாளியைக் குணப்படுத்த முடியும். அதனால் அந்த அழகியைப் பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லுங்கள்'' என்றான்.
நடந்த எல்லாவற்றையும் சொன்னான் அரசன். முதலில் அந்தக் குதிரையைப் பார்க்க வேண்டும். அது இயங்கும் நிலையில் உள்ளதா என்பதை அறிய வேண்டும். இயங்காவிட்டால் இளவரசியுடன் தப்பிச் செல்ல வேறு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தான் அவன்.
''மருத்துவரே! என்ன சிந்திக்கிறீர் என்று கேட்டான் அரசன்.
அரசே! முதலில் நான் அந்தக் குதிரையைப் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த அழகியை எப்படி குணப்படுத்துவது என்று என்னால் அறிய முடியும்'' என்றான் அவன்.
''வீரர்களே! இவரை அந்தக் குதிரையிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள்'' என்று கட்டளையிட்டான் அரசன். வீரர்களுடன் சென்ற அவன் குதிரையைப் பார்த்தான்.
அது நன்றாக இயங்கும் நிலையில் உள்ளதை அறிந்து கொண்டான். அரசனிடம் திரும்பி வந்த அவன் நான் அந்த அழகியைப் பார்க்க வேண்டும். அவன் எப்படி பைத்தியம் ஆனாள் என்பதை அறிய வேண்டும்.
அதன் பிறகு அவளையும் குதிரையையும் வைத்து சில பூசைகள் செய்ய வேண்டும் என்றான். என்னுடன் வாருங்கள். அவளைக் காட்டுகிறேன் என்றான் அரசன்.
இருவரும் அந்தப்புரம் அடைந்தார்கள். அங்கே ஓர் அறையில் இளவரசி நகார் தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தாள். காதலன் எப்படியும் தன்னைத் தேடி வருவான். அதுவரை இந்த அரசனிடம் இருந்து தப்பிக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று சிந்தித்த அவள் பைத்தியம் போல நடிக்கத் தொடங்கினாள்.
அரசனுடன் தன் காதலனைப் பார்த்த அவள், மகிழ்ச்சியால் அலறினாள். அப்படியே மயங்கி விழுந்தாள்.
''மருத்துவரைப் பார்த்தால் போதும். கத்தி ஆர்ப்பாட்டம் செய்து துணிகளைக் கிழித்துக் கொள்வாள். இவரைப் பார்த்ததும் மயங்கி விழுந்து விட்டாளே. இவர் ஆற்றல் வாய்ந்த மருத்துவர்தான்'' என்று நினைத்தான் அரசன். அவள் அருகே சென்ற இளவரசன்
''கொடிய பிசாசே! நீ இவளுக்குத் தந்த துன்பங்கள் போதும். இவளை விட்டு ஓடிவிடு. இல்லையேல் உன்னைத் தொலைத்து விடுவேன்'' என்று உரத்த குரலில் மிரட்டினான். மயக்கம் தெளிந்த அவள் அவனைப் பார்த்தாள். அவளுக்கும் தனக்கும் தெரிந்த பாரசீக மொழியில் அவன்,
''அன்பே! நான் சொல்வது போல நீ செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் நாம் தப்பிச் செல்ல முடியும். அரசரிடம் இனிமையாகப் பேசு என்று மெல்லிய குரலில் சொன்னான்.
அவன் ஏதோ மந்திரங்கள் சொல்வதாக நினைத்தான் அரசன். அரசனைப் பார்த்து அவன், ''என் முன் எந்தப் பேயும் நிற்க முடியாது. என்னைக் கண்டதும் அந்தப் பேய் ஓடிவிட்டது. நீங்கள் அவளிடம் பேசுங்கள்'' என்றான்.
அவள் அருகே சென்ற அரசன் ''அழகியே! எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டான்.
எழுந்த அவள் ''அரசே! எனக்கு என்ன நிகழ்ந்தது? ஒன்றும் புரியவில்லையே. உங்களை உரிய முறையில் வரவேற்காததற்காக என்னை மன்னியுங்கள். இனி உங்கள் உள்ளம் மகிழுமாறு நடந்து கொள்வேள்'' என்று இனிமையாகப் பேசினாள்.
''ஆ! இவளிடம் இவ்வளவு மாற்றமா? என்று மகிழ்ந்தான் அரசன்.
பணிப் பெண்களே! இவளை நன்னீராட்டி பட்டு ஆடைகளையும் விலை உயர்ந்த அணிகலன்களையும் அணிவியுங்கள். மணப் பெண்ணைப் போல ஒப்பனை செய்து அழைத்து வாருங்கள்'' என்றான்.
(தொடரும்) |
| Last Updated on Tuesday, 21 February 2012 21:07 |



