Login Form
Invite Friends
| ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி 4 |
|
|
|
| Written by செபரா |
| Tuesday, 10 January 2012 17:49 |
|
மனம்போல வாழ்வு மகிழ்ந்தீயுந் தாயென்றுன் மாணடியைத் தினமார வுன்னித் தியானிக்கையில் கூரருட் தெய்வகன்னி தனதான்ய புத்திர சம்பத்தெல் லாமுந் தருபவளென் மனனசிந் தாமணி மாணிக்க காமாட்சி மாமயிலே!
மனம் விரும்பிய வகையில் இனிய நல் வாழ்வினை (சிலசமயம் தன் குழந்தை விரும்பிக் கேட்பது அதற்கு நலம் தருமா என்ற ஐயமிருந்தாலும், தான் அருகிலிருக்கும் துணிவில், எது வந்தாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில்) மகிழ்ச்சியுடன் நமக்குத் தரும் தாய் போன்றவளே என்று உனது உயரிய திருவடிகளை அனுதினமும் மனமொன்றி எண்ணுபவன் அதனால் செல்வம், உணவு, மக்கட்செல்வம் ஆகிய எல்லாவற்றையும் தரும் தெய்வத் திருமகள். மனதில் எண்ணியதெல்லாம் தானே அளிக்கக்கூடிய (தேவருலகத்து) சிந்தாமணி என்ற மாணிக்கம் போன்றவளும் மயிலைப் போன்ற அழகுடையவளுமாகிய என் தாய் காமாட்சி அருள்வாள். - தொடரும்
|



